Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 24 May 2025
webdunia

வாக்காளர்களுக்குப் பணம்.....துரைமுருகன் மீது வழக்குப்பதிவு....

Advertiesment
.துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:47 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021  வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சார செய்து வந்த நிலையில் நேற்றுடன் இப்பிரசாரமும் ஓய்ந்தது.

இந்நிலையில், இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டசபைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார் துரைமுருகன். இந்நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட குப்பத்தா மேட்டுர் பகுதிய்ல் நேற்றிரவு இரவு திமுக கோபி என்பவர் பணப்பட்டுவாட்டா செய்வதாக புகார் வந்தது. அங்கு பறக்கும்படையினர் சென்று சோதனை செய்தனர். இதில் ரூ.56 ஆயிரம் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. கோபியை கைது செய்து சிறையில் அடைத்து அவர் மீது 3 பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன் மீது 171இ இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெயர் இடம்பெறாததால்...சசிகலா தேர்தல் ஆணையத்தில் முறையீடு