Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

NEET தேர்வில்...வஞ்சக வெறித்தனம் வினாத்தாள் தயாரிப்பில் தெரிகிறது - ராமதாஸ்

NEET தேர்வில்...வஞ்சக வெறித்தனம் வினாத்தாள் தயாரிப்பில் தெரிகிறது - ராமதாஸ்
, புதன், 8 ஜனவரி 2020 (18:54 IST)
மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள்  கட்டாயம் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டுமென மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த நீட் நுழைவுத் தேர்வு குறித்து பாமக நிறுவனத் தலைவரும் மருத்துவருமான ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், முதுநிலை மருத்துவப் படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. வினாத்தாள் தயாரித்தவரே அத்தேர்வை எழுதியிருந்தால் கூட  20% வினாக்களுக்கு தவறான விடை தான் எழுதியிருப்பார்.  எப்படியோ நீட்டை உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது! 
 
நீட் நுழைவுத்தேர்வு என்பது ஏழை,கிராமப்புற, நடுத்தர மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேராமல் தடுப்பதற்கான நுழையாத்தேர்வு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இப்பிரிவினர் மருத்துவர்களாகி சேவை செய்து விடக்கூடாது என்ற வஞ்சக வெறித்தனம் வினாத்தாள் தயாரிப்பில் தெரிகிறது!  என பதிவிட்டு அதை மத்திய அமைச்சர் ஹர்சவர்தனுக்கு டேக் செய்துள்ளார்.
 
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தமிழக கூட்டணியில் பாஜக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடு ராத்திரியில் உருவான திடீர் ”ஜெயலலிதா” சிலை.. மக்கள் பரபரப்பு