Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை எழுவர் விடுதலை இல்லை: சுப்பிரமணியன்சுவாமி

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (17:28 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறி பல மாதங்கள் ஆகிவிட்டது.
 
இதனையடுத்து தமிழக அரசும் இதுகுறித்து தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர் இந்த தீர்மானம் குறித்து நடவடிக்கை எடுக்காததால் எழுவர் விடுதலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
 
இந்த நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மக்களிடம் நியாயம் கேட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments