Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடையை தயாரா வெச்சிகோங்க! – முன்னதாகவே தொடங்கிய பருவமழை!

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (13:33 IST)
தமிழகத்தில் பருவமழை நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முதலே மழை பெய்ய தொடங்கியுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா பகுதிகளில் பரவலாக பெய்யும் பருவமழை இன்று முதல் தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் விவசாய தேவைகளுக்கும், நீர் பாசனத்திற்கும் பெரும்பாலும் மக்கள் வடகிழக்கு பருவமழையையே நம்பியுள்ளனர். தமிழகத்தின் நீர் தேவையில் சராசரி பங்கை வடகிழக்கு பருவக்காற்றால் பெய்யும் மழையே தீர்த்து வைக்கிறது. தற்போது தமிழகத்தின் பல ஆறுகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும் நிலையில் பருவ மழையும் தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 17 மற்றும் 18ம் தேதிகளில் வளிமண்டல சுழற்சியால் பெரிய அலைகள் உருவாகக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments