Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு சுயேட்சை ஓபிஎஸ்.. வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்பு..!

Mahendran
திங்கள், 25 மார்ச் 2024 (19:18 IST)
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அதே ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இருவரும் ஒரே பெயரில் ஒரே இனிஷியலில் இருப்பதால் வாக்காளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம்  தொகுதியில் பாஜக சார்பில் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில் அதே தொகுதியில் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த ஓ பன்னீர் செல்வம் என்பவர் சுயேட்சையாக போட்டியிட இன்று மனு தாக்கல் செய்து உள்ளார் 
 
ஒரே பெயரில் இரண்டு ஒரே இனிஷியலில் ஒரே  ஒரே தொகுதிகள் 2 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சின்னத்தை வைத்து மட்டுமே வாக்காளர்கள் வேறுபடுத்தி பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு இது குறித்து கூறிய போது இது திமுகவின் சதி என்று வழக்கம்போல் குற்றம் சாட்டி வருகின்றனர். 

ALSO READ: பதவி இல்லாமல் இருந்தாலும் பாடுபடுவேன்: தர்மபுரி எம்பி செந்தில் குமார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments