பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தேவையற்றது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இன்று டெல்லியில் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தும் நிலையில், எதிர்கட்சி முதல்வர்களான சித்தராமையா, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் அதை புறக்கணித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளார்.
இதை விமர்சித்து பேசியுள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் “நிதி ஆயோக் கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஏன் செல்கிறார்? இந்தியாவின் பதில் தாக்குதலை ஆதரித்து சென்னையில் திமுக நடத்திய பேரணியில் அரசியல் உள்ளது. போருக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல் நபர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அரசியல் லாபத்திற்காக பாஜகவும் திமுகவுடன் இணக்கமாக இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரிலே என்ன நியாயம் இருக்கிறது? இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளை என்ன செய்தீர்கள்? நாட்டுக்குள் புகுந்து தாக்கிவிட்டு தப்பி சென்று விடலாம் என்ற எண்ணம் எப்படி அவர்களுக்கு வந்தது? ஒரு நாட்டிற்குள் நுழைய நினைத்தாலே போட்டு தள்ளி விடுவார்கள் என பயம் இருந்திருந்தால் அவர்கள் சிந்தனை அங்கேயே செத்திருக்கும்” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K