Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

Advertiesment
அதிமுக

Mahendran

, சனி, 17 மே 2025 (15:56 IST)
போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள்  அதிமுக என்ற  இயக்கத்தை  அசைத்து கூட பார்க்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
 
டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் திரு. ஸ்டாலின்-க்கு  பயத்தை உருவாக்கியிருக்கிறது ,  பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.
 
டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து  திரு. ஸ்டாலின், மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?
 
பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள்  அதிமுக என்ற  இயக்கத்தை  அசைத்து கூட பார்க்க முடியாது. 
இவை அனைத்தையும் நிச்சயம்  சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
வெல்வோம்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!