Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை: இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என தகவல்..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (09:16 IST)
நேற்று இரவு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்திருப்பதை அடுத்து இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இன்று காலை முதல் சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பதும் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று இரவு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தடுத்தது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 53 மில்லி மீட்டர் மழையும் கடலூரில் 49 மில்லி மீட்டர் மழையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதேபோல் புதுச்சேரியில் 43 மில்லி மீட்டர், மதுரையில் 34 மில்லி மீட்டர், கொடைக்கானலில் 29 மில்லி மீட்டர், திருச்சியில் 24 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்பட்டிருப்பது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments