இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
வெள்ளி, 9 மே 2025 (14:04 IST)

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும்ம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 13ம் தேதி முதல் தொடங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

அதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை, இரவு நேரங்களில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments