Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

Siva
ஞாயிறு, 11 மே 2025 (14:43 IST)
தென்மேற்கு பருவமழை விரைவில்   தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் அதாவது மே 13-ஆம் தேதி வாக்கில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் பருவமழை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை சில இடங்களில் மின்னல், இடி, பலத்த காற்றுடன்  மழை பெய்யலாம். இந்த மழை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் பாதிக்கக்கூடும். மே 13 முதல் 15 வரை நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
மே 16 மற்றும் 17-ஆம் தேதிகளிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை துளிர்க்கும்.
 
சென்னையில் இன்று சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம். நாளையும் வானம் மேகமூட்டமாகவே காணப்படும். வெப்பநிலை அதிகமாகவும், ஈரப்பதம் உயரும் என்பதால் வெப்பத்தால் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
 
கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், 15-ந்தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், கடலுக்குள் செல்லாமல் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments