Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது ஓகே!!! ஆனா இது நாட் ஓகே!! தேமுதிக - அதிமுக கூட்டணி இழுபறி ஏன்?

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (13:07 IST)
தேமுதிக அதிமுக கூட்டணி இழுபறிகளுக்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத தேமுதிக, ஆரம்பம் முதலே கொஞ்சம் ஓவராய் தான் போய்க்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிமுக பாமகவிற்கு 7 சீட் கொடுத்த பின்னர், தங்களுக்கு 7 அல்லது அதற்கு மேலான சீட்டுகளை கொடுத்தால் தான் கூட்டணி என அதிமுகவிடம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது தேமுதிக.
 
இதையடுத்து இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கும் தேமுதிக பிடிகொடுக்கவில்லை. இதனால் திமுக தேமுதிகவை கழற்றிவிட்டுவிட்டது.
 
இந்நிலையில் நேற்றுமுன் தினம் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதால் தேமுதிகவின் கூட்டணி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
 
இன்று அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க இருக்க்கும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளால் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் விஜயகாந்த் புகைப்படம் இல்லை. அவரை தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இருக்கின்றது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது.
 
இந்நிலையில் அதிமுக தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் எனவும் அதிலும் 2 இடங்கள் தனித்தொகுதிகளாக வழங்கமுடியும் என கூறியுள்ளதாம். இறுதியில் தேமுதிக 4 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் 2 ரிசர்வ் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தான் பிரச்சனையாக உள்ளது எனவும் அதுவே இந்த இழுபறிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
 
எது எப்படி ஆயினும் இன்னும் சில மணி நேரங்களில் தேமுதிக கூட்டணி குறித்த இறுதி முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments