Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமனை நீக்க ஜனாதிக்கு கடிதம் அனுப்பிய அதிகாரி வேட்புமனு தாக்கல்.. வடசென்னையில் போட்டி..!

Mahendran
செவ்வாய், 26 மார்ச் 2024 (16:08 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பணியில் இருந்தபோது ஐஆர்எஸ் ஆர் அதிகாரி  ஒருவர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய நிலையில் அவர் தற்போது சுயேட்சையாக வட சென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சேலத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் என்பவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார் 
 
ஆனால் அவர் ஓய்வு பெறும் நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சுயேசையாக போட்டியிட வேண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் 
 
தனக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் தன்னை தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பினால் இந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments