Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்து ஓடி கொண்டிருந்தபோது சக்கரம் தனியாக கழன்றது.. பயணிகள் அதிர்ச்சி..!

Siva
வியாழன், 1 மே 2025 (07:34 IST)
தமிழ்நாட்டில் அரசு பேருந்து சாலையில் ஓடிக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலம் விருத்தாச்சலம் பணிக்கு சொந்தமான, தடம் எண் 310 என்ற பேருந்து திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்த நிலையில், திடீரென திட்டக்குடியை அடுத்த ‘அரங்கூர்’ என்ற பகுதிக்கு வந்தபோது, பேருந்தின் முன் இடது பக்க சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது.

இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். ஆனால், பேருந்து ஓட்டுனர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.

இதனால் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இருப்பினும், மிக மோசமாக பராமரிக்கப்பட்ட பேருந்துகள் உயிரைப் பணயம் வைத்து இயக்கப்படுவதா? என, சமூக அக்கறை கொண்டவர்கள் கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments