Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன செய்யப்போகிறது சிங்கப்பெண் அதிரடிப்படை?.. இன்று விஜய் துவங்கி வைக்கிறார்!..

Advertiesment
singappen
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததுமே மூன்று முக்கிய அறிவிப்பை தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டார். அதில் ஒன்றுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சிங்கப்பெண் அதிரடி படை. ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பு இந்த திட்டம் முதல்வர் விஜயால் துவங்கி வைக்கப்படவிருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
 
அதோடு அன்று அவர் தனது உதவியாளரின் புதுமனை புகுவிழாவுக்கு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் இன்று துவங்கப்படவிருக்கிறது. இன்று மாலை 5 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜா ரத்தினம் திடலில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு இந்த திட்டத்தை துவங்கி வைக்கிறார்..
 
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதலும் கவனம் செலுத்த சிங்கப்பெண் அதிபடை உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசால் பிரத்யோக காவல் படையாக இந்த சிங்கப்பபடை செயல்படவிருக்கிறது.  சிங்கப்பெண் அதிரடி செயல்படுத்துவதற்காக ஐஜி பவானீஸ்வரி ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 
பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த சிங்கப் பெண் படை பாதுகாப்பு கொடுப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களை கண்டறிந்தும், ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அங்கு சிங்கப் பெண் அதிரடி செயல்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் அறிவித்த H1B விசா கட்டணம் ரத்து!.. அமெரிக்கா நீதிமன்றம் அதிரடி உத்தரவு