Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கான தீர்வு: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் நிச்சயம் ஏற்படும் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (18:08 IST)
தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை சிதைத்து - உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை. இதற்கான தீர்வு 2024 மக்களவைத்தேர்தலுக்குப் பின் நிச்சயம் ஏற்படும் என்று அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராடியும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது.

இதுபற்றி அமைச்சர் உதயநிதி அமைச்சர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை திரு.செல்வசேகர் அவர்களும் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.

பிள்ளைகளை பலிவாங்கிய நீட் - இப்போது பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளுவது மிகுந்த வேதனையைத் தருகிறது. குரோம்பேட்டை அரசு மருத்துமவமனையில் செல்வசேகர் அவர்களுடைய திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். நமக்கே ஆறுதல் தேவை என்ற நிலையில், அவருடைய உறவினர்களைத் தேற்றினோம்.

நீட் ரத்துக்காக இருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டும், அதனை கிடப்பில் போடுவதும், திருப்பி அனுப்புவதும் என்று ஆளுநர் தன் கடமையிலிருந்து தவறியது தான் இந்த தற்கொலைகளுக்கு காரணம்.

தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை சிதைத்து - உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை. இதற்கான தீர்வு 2024 மக்களவைத்தேர்தலுக்குப் பின் நிச்சயம் ஏற்படும். எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும் - மனஉறுதியுடனும் இருக்க வேண்டுமென உங்களின் அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி  நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments