Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து – தீபாவளி சிறப்பு பேருந்துகள் விவரம்

எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து – தீபாவளி சிறப்பு பேருந்துகள் விவரம்
, வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:21 IST)
தீபாவளிக்கு தமிழ்நாடு முழுவதும் 22000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.

தீபாவளி சமயத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக பேருந்துகளை 6 வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது எந்தெந்த பகுதிகளில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற விவரங்கள் வெள்யாகியுள்ளன.

மாதவரம் பேருந்து நிலையம்- ஆந்திரா செல்லும் பேருந்துகள்

கே கே நகர் பேருந்து நிலையம்– ECR  வழியாக புதுச்சேரி, கடலூர், சிதமபரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்- விக்கிரவாண்டி, பன்ரூட்டி வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் ரயில் நிலைய பேருந்துகள்– திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி பேருந்து நிலையம்– காஞ்சிபுரம், செய்யாறு, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையம்- மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.

இந்த சிறப்பு பேருந்துகள் நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வகுப்பறையில் குடுமிபுடி சண்டை: ஆசிரியைகள் ரகளை