Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி தூத்துக்குடியில் வீடு எடுத்துவிட்டார் - ஸ்டாலின் பேச்சு !

Webdunia
வியாழன், 2 மே 2019 (16:47 IST)
தூத்துக்குடியில் கனிமொழி கிட்டத்தட்ட வெற்றி பெற்று விட்டதாகவும் அதனால் தூத்துக்குடியிலேயே தங்க வீடு எடுத்துள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பிடாரத்தில் முகாமிட்டுள்ளார். ஒட்டப்பிடாரத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர் திமுக ஆட்சியமைக்கும் போது தூத்துக்குடி மாவட்ட மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனப் பேசினார்.

மேலும் ‘ஏற்கனவே ஏப்ரல் 18 ஆம் தேதியே கனிமொழியை எம்.பியாக தேர்வு செய்துவிட்டீர்கள். மே 23 ஆம் தேதி முடிவு வரவேண்டியதுதான் பாக்கி. நாடாளுமன்ற அலுவல் நேரம் தவிர மீதி நேரம் அவர் தூத்துக்குடியில்தான் இருப்பார். அதற்காக அவர் இங்கேயே வீடு எடுத்துவிட்டார்.

22 தொகுத்கிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதைத் தடுக்கவே எடப்பாடி அரசு 3 எம்.எல்.ஏ.க்கள் மீதான் நடவடிக்கை திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். அதற்கும் நாங்கள் தயாராக நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். எடப்பாடி அரசு ஆட்சியைக் காப்பாற்ற வேலை செய்கிறார். மக்களுக்காக எதையும் அவர் செய்யவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments