Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் - கலக்கத்தில் தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:10 IST)
ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது.
 
இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  
 
இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments