Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்.. டெல்லி கொண்டு செல்லும் அண்ணாமலை..!

Mahendran
புதன், 6 மார்ச் 2024 (11:21 IST)
தமிழக பாஜக வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி கொண்டு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து ஆலோசனை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 25 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பட்டியலை அண்ணாமலை மற்றும் எல். முருகன் இருவரும் டெல்லிக்கு இன்று கொண்டு செல்வதாகவும் டெல்லி தலைமை இந்த பட்டியலை ஆய்வு செய்து யார் யார் வேட்பாளர்கள் என்பதை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில் பாமக மற்றும் தேமுதிகவுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments