Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ பாஸ் எப்போது வரை நடைமுறையில் இருக்கும் தெரியுமா...??

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (11:10 IST)
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் நடைமுறையில் உள்ள இ பாஸ் குறித்து பேட்டியளித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால்  பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
 
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, இ பாஸ் எடுக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுமே தவிற ரத்து செய்யப்படாது என கூறிவிட்டார். இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
இ பாஸ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments