Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து முடிவெடுக்காத தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள். என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (08:23 IST)
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்னர் அதிமுக தனியாக ஒரு கூட்டணி அமைக்க இருப்பதாகவும் பாஜக தனியாக ஒரு கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதால் திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் அதிமுகவுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
 ஆனால் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மாறிவரும் சூழல் இல்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்த முடிவு எடுக்காமல் உள்ளது. 
 
குறிப்பாக  தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய  கட்சிகள் ஜனவரி மாதத்திற்கு பின்பு கூட்டணி குறித்து முடிவெடுக்க போவதாக கூறியுள்ளன. இந்த கட்சிகள் அதிமுக அல்லது பாஜக ஆகிய இரண்டு கூட்டணிகளில் ஒன்றில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  
 
ஒருவேளை பாமக, திமுக கூட்டணியில் சேர்ந்தால் விடுதலை சிறுத்தைகள் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறிய அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கும் போதுமான தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றால் அந்த கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது.  
 
எனவே ஜனவரி மாதத்திற்கு பிறகு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த தங்களது முடிவை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments