Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை பற்றி வெளியான வீடியோ போலியானது – திருமா விளக்கம்

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (14:44 IST)
என் மீது லண்டனில் கரன்சியை விட்டெறிந்ததாக வெளியான வீடியோ உண்மையில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அங்கு தமிழர்களால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது இலங்கை தமிழர் ஒருவர் திருமாவை ”இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைத்து துரோகம் செய்திருக்கிறீர்கள். பணத்திற்காகதானே இதை செய்தீர்கள்” என்று கூறி கரன்சி நோட்டுகளை அவர் முகத்தில் தூக்கி வீசியதாக வீடியோ ஒன்று அண்மையில் வைரலாக பரவியது.

இதை மறுத்த திருமாவளவன், அந்த வீடியோ உண்மையில்லை என கூறியிருக்கிறார். இது குறித்து அவர் “லண்டனில் என் மீது யாரும் கரன்சி நோட்டுகளை எறியவில்லை. அங்கு நடந்த கூட்டத்தில் கடைசி இருக்கையில் இருந்த நபர் ஒருவர் திமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கேள்வியெழுப்பினார். பிறகு அவர் அப்புறப்படுத்தப்பட்டார்” என பதிலளித்துள்ளார்.

இதற்கு இணையத்தில் எதிர்வினையாற்றியுள்ள சிலர் “கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியதுதானே? ஏன் அப்புறப்படுத்த வேண்டும்? என பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments