Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு இட்லி ஒரு தோசை சாப்பிட்டு 12 ஆயிரம் பில்லு கொடுக்குறேன்!.. திருமா வேதனை!...

Advertiesment
thirumavalavan
விசிக தொடர்ந்து திமுகவுன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் விசிக திமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், தொகுதி பங்கிட்டிலேயே விசிகவுக்கு குடைச்சல் கொடுத்தது திமுக. விசிக கேட்ட தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை. அதேபோல் எண்ணிக்கையையும் குறைத்தது.

இதனால் சில தொகுதிகளில் விசிகவால் வெற்றி பெற முடியவில்லை. அதோடு தேர்தலில் திமுக கட்சி தோல்வியை சந்தித்து இரண்டாம் இடத்திற்கு சென்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்தது. ஆட்சி அமைக்க விசிகவின் ஆதரவு வேண்டும் என தவெக கேட்டபோது இரண்டு நாட்கள் நேரம் எடுத்துக் கொண்டார் திருமாவளவன். இது அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திருமாவளவன் பேரம் பேசுகிறார் என பலரும் விமர்சித்தார்கள். ஒருபக்கம், தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க திருமாவளவனை முதலமைச்சராக்கும் முயற்சியையும் திமுக கையில் எடுத்தது. ஆனால், அது அமையவில்லை.

தற்போது தவெகவின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்று விட்டது. ஆனாலும் தன்னை பலரும் கடமையாக விமர்சிப்பதாக திருமா தொடர்ந்து மேடைகளில் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சியில் பேசிய திருமாவளவன் ‘ஒரு நாளைக்கு 20 மணி நேரம் நிர்வாகிகளை சந்திக்கிறேன். எந்த அரசியல் தலைவரையும் 10 மணிக்கு மேல் தொந்தரவு செய்யமாட்டார்கள். ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கூட என்னை சந்திக்க வருகிறார்கள்.

கட்சியின் வளர்ச்சி குறித்து சிந்திக்க எனக்கு தனிமை தேவைப்படுகிறது.. நான் ஹோட்டலுக்கு சென்றால் என் அறைக்கு வெளியே 10 ஆயிரம் பேர் நிற்கிறார்கள். உள்ளே இருந்து ஐந்தாயிரம் பேர் வெளியே தள்ளுகிறார்கள். இதையெல்லாம் நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். நாம் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் இரண்டு இட்லி ஒரு தோசை சாப்பிடுகிறேன் ஆனால் 12 ஆயிரம் ரூபாய் பில் கட்டுகிறேன்’ என புலம்பியிருக்கிறார் திருமா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. புதிய மசோதா தாக்கல்?