Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னொரு கரூர் சம்பவம் ஆகியிருக்கும்!.. அலார்ட் ஆயிட்டேன்!.. திருமாவளவன் விளக்கம்!..

Advertiesment
thirumavalavan
கடந்த 17ம் தேதி உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் மாநாடு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேச அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வந்தபோது ஏராளமான தொண்டர்கள் அவரை சுற்றி வளைத்து அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர்.

பவுன்சர்களாலும் அவர்கள் கட்டுப்படுத்த முடியவில்லை. பலரும் அவருக்கு சால்வை போட முயன்றனர். சிலர் சரியாக போட முடியாமல் அவரின் தலையில் போட்டனர். இதில் கோபடமைந்த திருமா சிலரை முதுகிலும் அடித்தார். பலரையும் பவுன்சர்கள் கீழே தள்ளிவிட்டனர். இது எல்லாமே வீடியோவாக வெளியானது.

அதேபோல் திருமாவளவனால் மேடையிலும் சரியாக பேச முடியவில்லை. அங்கும் பலரும் அவரை சுற்றி நின்று அவரின் அருகில் செல்ல முயற்சி செய்தனர். எனவே, மேடையிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மூச்சு முட்டி திருமாவளவன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தண்ணீரை குடிக்கும் வீடியோவும் வெளியாகி அதிர வைத்தது. இதன் காரணமாக, அந்த மாநாட்டில் திருமாவளவன் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். இது விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ள திருமாவளவன் ‘கூட்டம் அதிகமாக இருந்தது.. கரூர் சம்பவம் போல நடந்து விடக்கூடாது.. மக்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற பதட்டத்தால் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் ஒரு சில நிமிடங்களில் என் உரையை முடித்தேன். இன்னும் சில நிமிடங்கள் நான் கூடுதலாக பேசியிருந்தால் என்னவாகியிருக்கும் என என்னால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை’ என கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.எல்.ஏக்களுக்கு கார்!. செலவுக்கு ஒரு லட்சம்!.. முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!...