Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

35 வருஷம் உழைப்பு வீணாப்போச்சி!.. நொந்துபோய் பேசிய திருமாவளவன்!...

Advertiesment
thirumavalavan
கடந்த பல தேர்தலாகவே விடுதலை சிறுத்தை கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்தே அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறது. அதேநேரம் விசிக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கும் திமுக அமைச்சரவையில் இடம் கொடுப்பது இல்லை. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்ததோடு விசிக, முஸ்லீம் லீக், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து விட்டது. விசிக எம்.எல்.ஏ வன்னியரசு தற்போது அமைச்சராக மாறியிருக்கிறார்..

எனவே, விசிக தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறதா? இல்லை திமுக கூட்டணியில் தொடர்கிறதா என்பது யாருக்கும் தெரியவில்லை. நேற்று ஒரு விழாவில் பேசிய திருமாவளவன் ‘திமுக கூட்டணியில் விசிக இல்லை என நாங்கள் சொல்லவில்லை.. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்..  

எந்த அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவளித்தீர்கள் என கேள்வி கேட்கும் இளைஞர்கள் எனக்கு வேண்டும்.. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான நெருக்கடி என்ன வந்தது? அதை ஏன் அறிவிக்கவில்லை? என கேள்வி கேட்க வேண்டும். பாஜக கூட்டணியில் சேர்ந்து நான் அமைச்சரானால் அதையும் கொண்டாடுவீர்களா? அப்போதும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்பீர்களா?.. அப்படி கேட்பவர்கள்தான் என்னுடன் இருக்கிறார்கள் என்றால் என்னுடைய 35 வருட உழைப்பு வீணாகி விட்டதாகத்தான் அர்த்தம். அரசியல் புரிதல் உள்ளவர்களை நான் வளர்க்கவில்லை என்று அர்த்தம்.. அதை நினைத்து நான் நொந்து போயிருக்கிறேன்’ என புலம்பியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் மக்களை ரஷ்யா கொல்லப்போகிறது!.. காப்பாத்துங்க!.. அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை...