Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (13:08 IST)
திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
திருவண்ணாமலையில் தற்போது கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில்  நேற்று முன்தினம் மகா தேரோட்டம் நடந்தது. இந்த நிலையில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட இருப்பதாகவும் இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.  
 
மோட்ச தீபம் என்று அழைக்கப்படும் இந்த மகா தீபம் ஏற்றியவுடன் அண்ணாமலையின் உச்சியில் ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சி அளிப்பார். இந்த மகா தீப தரிசனத்தை 11 நாட்கள் காணலாம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் கார்த்திகை மாத பௌர்ணமி வரும் 26 ஆம் தேதி என்பதால், அன்றைய நாள் பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களும் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments