Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக வேளாண் பட்ஜெட்!.. முக்கிய அறிவிப்புகள் என்ன?..

Advertiesment
budget
தமிழக சட்டசபையில் நேற்று நிதி பட்ஜெட் வாசிக்கப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வேளாண் அமைச்சர் வினோத் சுமார் 2.07 மணி நேரங்கள் உரையாற்றினார். காலை 9:30 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய அமைச்சர் வினோத் 11.38 மணிக்கு உரையை நிறைவு செய்தார். வேளாண் நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய அம்சங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்..

2026-27 ஆம் ஆண்டில் மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி மின்வாரியத்திற்கு வழங்கப்படும்.

பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம் ரூ.203.64 கோடி ஒதுக்கீடு

மண்ணின் வளத்தை பாதுகாக்க "தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்" ரூ.122.51 கோடி ஒதுக்கீடு

பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் ரூ.27.21 கோடி ஒதுக்கீடு

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க "காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம்" ரூ.7.35 கோடி ஒதுக்கீடு

5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருது ரூ.11 லட்சம் ஒதுக்கீடு

பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்திக் கூடாரங்கள் ரூ.2 கோடி ஒதுக்கீடு

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்

மழை, வெயிலிலிருந்து விளை பொருட்களைப் பாதுகாக்க 43,500 தார்ப்பாய்கள் ரூ.10 கோடி ஒதுக்கீடு

கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ‘கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்’ ரூ.9 கோடி ஒதுக்கீடு

நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்புத் திட்டம் ரூ.34.72 கோடி ஒதுக்கீடு

17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம் ரூ.9.36 கோடி ஒதுக்கீடு

வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் - 10 கோடி ஒதுக்கீடு

57,000 அளவிற்கு மெட்ரிக் டன் வெங்காயம் சேமிக்க கிடங்குகள் அமைப்பதற்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு

100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி; 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள் ரூ.4 கோடி ஒதுக்கீடு

24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்க ரூ.227 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் ரூ.5.20 கோடி ஒதுக்கீடு

இ - வாடகை 2.0 செயலி மூலம் வேளாண் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை விரிவுபடுத்தும் வகையில் புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.20.31 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ரூ.5 கோடி ஒதுக்கீடு..

ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் AI அடிப்படையிலான உழவர் செயலி ரூ.2 கோடி ஒதுக்கீடு

தென்னை மரங்களின் நலத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 86 ஆயிரம் ஏக்கரிலான தென்னை மரங்களுக்கு "தென்னை டானிக்" ரூ.41 கோடி ஒதுக்கீடு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

27 ஆண்டுகள் கூகுளில் வேலை செய்தவர் ராஜினாமா.. இந்திய நண்பருடன் இணைந்து ஸ்டார்ட் அப் தொடங்க திட்டம்...