Publish Date: Sat, 19 Sep 2026 (13:10 IST)
Updated Date: Sat, 19 Sep 2026 (13:12 IST)
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 10ம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் புறப்பட்டு சென்றார். அங்க ஒரு வாரம் தங்கியிருந்தார் அங்கு பல நிறுவனங்களுடன் பேசி 15 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தமிழ்நாட்டு முதலீடுகளை அவர் ஈர்த்து வந்தார்.
இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உலக பொருளாதாரம் மன்றத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்விங்கி மற்றும் இயக்குனர் கைரூஸ் முதலமைச்சர். விஜய்க்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். எனவே, அதில் கலந்துகொள்ள விஜய் சுவிர்சர்லாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க