Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடித்து வெளுக்கும் கனமழை..! – எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (07:50 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதலாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பொழிந்த நிலையில் இன்றும் பல பகுதிகளில் காலையில் இருந்தே மழை தொடர்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடியற்காலை முதலாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: 62.66 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

அதுபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு, பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments