போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தங்களுடைய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நேற்று நள்ளிரவு சரியாக 12 மணி முதல் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் வழக்கமான எண்ணிக்கையைவிட மிகக் குறைந்த பேருந்துகளை இந்த வேலைநிறுத்தம் காரணமாக இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வழக்கமாக 200 பேருந்துகள் இயங்கும் நிலையில் இன்று 80 பேருந்துகள் மட்டுமே பணிமனையில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
உளுந்தூர்பேட்டை பணிமனையில் மொத்தமுள்ள 40 பேருந்துகளில் 5 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பணிமனையில் வெறும் நான்கு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இருந்தாலும் கோவை கோட்டத்தில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை கொண்டு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மற்ற மாவட்டங்களில் வரும் நிலவரம் குறித்து வரும் தகவல்களை அவ்வப்போது பார்ப்போம்