Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

Advertiesment
thiruma vijay
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 08 எம்எல்ஏக்களை பெற்ற நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் ஆதரவை பெற்று தவெக ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக மாறியிருக்கிறார்.

யாரும் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் மீது அதிருப்தி கொண்ட எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையிலான 24 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக கூறினார். அதோடு தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாகவும் அவர்கள் வாக்களித்தனர்..

தற்போது ஒரு படி மேலே போய் இதுவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் தங்களின் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். சமீபத்தில் 3 எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்த நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டார்.

இது தவெகவின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் பாஜக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளோடும் தவெக கூட்டணி வைப்பதை அந்த கட்சிகள் விரும்பவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன் ‘5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிப்போம் என்கிற நம்பிக்கையுடன் தவெக செயல்பட வேண்டும். ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தால் நம்பகத்தன்மை கெடும். பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் தவெக ஈடுபட்டிருக்கும். எந்த சூழலிலும் தவெகவின் ஆட்சி கவிழ விசிக இடம் கொடுக்காது. விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் தவெக செயல்பட வேண்டும்’ என அவர் கூறியிருக்கிறார்.

அதாவது கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என நினைத்து அதிமுக எம்.எல்.ஏக்களை தவெகவில் இணைக்கவேண்டாம் என திருமாவளவன் கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...