Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டசபையில் தெறிக்கவிட்ட விஜய்!.. தெறித்து ஓடிய திமுக எம்.எல்.ஏக்கள்..

Advertiesment
vijay
முதல்வர் விஜய் அதிகம் பேசுவதில்லை.. நாட்டில் எவ்வளவு பிரச்சனை என்றாலும் அமைதியாக இருக்கிறார் என திமுக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெகவை மிகவும் கடுமையாக விமர்சித்தும், நக்கலடித்தும் பேசினர். இன்று அதற்கு பதிலடி கொடுத்து பேசிய முதல்வர் விஜய் ‘நான் ஏதோ சினிமா சூட்டிங்கிலிருந்து நேராக முதல்வரானது போல பேசுகிறார்கள் 30 வருடங்களாக நாங்கள் மக்கள் சேவையை செய்து விட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். நேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் எங்க எவில் என பேசினார். அதை டெவில் பேசக்கூடாது.. சமூகநீதி என சொன்னவர்கள் எத்தனை பட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள். நாங்கள் 8 பட்டியலின உறுப்பினர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறோம்.

சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் ஆகியவற்றில் எங்களை குறை சொல்லும் திமுக அரசு தொடக்கத்திலே ஏன் தடுக்கவில்லை என்று யோசிக்க வேண்டும்.. என்னை பேசு பேசு என்கிறார்கள். ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டு விட்டது. டாஸ்மாக் துறையில் கட்சி நிதி என்கிற பெயரில் பல கோடிகளை கொள்ளை அடித்தார்கள். அது தற்போது தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது’ என்று விஜய் சொன்னதும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எதிர்த்து நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனால் விஜய் பேசுவதை நிறுத்திவிட்டார். சபாநாயகர் ஜேடிசி பிரபாகர ‘முதல்வர் பேசி முடிக்கட்டும்.. எதிர்கட்சி தலைவர் பேச நான் அனுமதி கொடுக்கிறேன்’ என சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து விஜய் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி பேசியதால் அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள்..

அதன்பின் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய் தேர்தல் நேரத்தில் முக ஸ்டாலின் செய்த உடல்மொழியை செய்து காட்டி விட்டு கீழே அமர்ந்து விட்டார். இதைப்பார்த்து தவெக எம்.எல்.ஏக்கள் மேஜைகளை தட்டி ஆர்ப்பரித்தனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.