Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் கட்சியில் உறுப்பினர்களாக சேர செயலி: விரைவில் அறிமுகம்..!

Siva
வியாழன், 1 பிப்ரவரி 2024 (17:01 IST)
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த கட்சியில் உள்ள நிர்வாகிகள் பெரும்பாலும் டெக்னாலஜியை பயனபடுத்த உள்ளதாக தெரிகிறது.

முதல் கட்டமாக விஜய் அரசியல் கட்சியில் சேர்வதற்கு என பிரத்யேகமாக செயலி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக ஓட்டு போடும் வாக்காளர்களை விஜய் அரசியல் கட்சி குறி வைத்துள்ள நிலையில் இந்த செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி பல்வேறு விஷயங்களை டெக்னாலஜி மூலம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.

விஜய் அரசியல் கட்சியின் கொள்கைகள் அனைத்தும் ஆன்லைன் அனைவரும் பார்க்கும் வகையில் தனியாக இணையதளம் தொடங்கப்படும் என்றும் முழுக்க முழுக்க டெக்னாலஜி மூலம் பிரச்சாரம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

முற்றிலும் வித்தியாசமாக விஜய் தனது கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுவதால் அவர் வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments