கமல்ஹாசனுடன் கூட்டணி? - விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
, செவ்வாய், 7 நவம்பர் 2017 (15:28 IST)
சென்னை பள்ளிக்கரணையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை விஜயகாந்த் இன்று காலை நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். அதனால்தான், ஜெயலலிதா அவர்களை பேசவிடாமல் வைத்திருந்தார்.
மத்திய அரசிடம் மழை நிவாரணமாக தமிழக அரசு ரூ.1500 கோடி கேட்டுள்ளது. ஆனால், மக்களுக்காக அதை கேட்கவில்லை. அவர்கள் பதுக்கிக்கொள்ளவே அதை கேட்கிறார்கள். ஏரி துர் வாருவதற்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூ.400 கோடி எங்கே போனது? அதை அமைச்சர்களே எடுத்துக்கொண்டார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன். கட்சி தொடங்கி அவர் மக்களின் அபிமானத்தை பெறட்டும். அதன் பின் கூட்டணி பற்றி பேசுவோம்” என விஜயகாந்த் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்