Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து: கோவையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (12:21 IST)
கோவையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம், பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவை அருகே இருகூர் என்னும் பகுதியில், மிக்-21 என்ற போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தின் 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், விவசாய நிலத்தில் விழுந்து தீப்பிடித்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக போர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி. இதில் அதிர்ஷ்டவசமாக, எந்த காயமும் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் கோவை இருகூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் ஆங்காங்கே போர் பயிற்சி விமானங்கள் விபத்துகுள்ளாவது குறித்து பல செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில் தற்போது கோவையிலும் பயிற்சி விமானம், விபத்துக்குள்ளான செய்தி, போர் விமானங்களின் தரம் குறித்து சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இதே போல், கடந்த மாதம் மிக் ரக போர் விமானம் ஒன்று சீன எல்லை அருகே விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த செய்தி குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments