தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நல்லது என்ற அறிவுறுத்தல் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
பொது சுகாதார விதிகள் அடிப்படையில்தான் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் மக்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்று கூறி இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்