Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணையை தெர்மகோல் போட்டு மூடி இருக்கோம்! – செல்லூராரை பங்கமாக கலாய்த்த துரைமுருகன்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (11:27 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் செல்லூர் ராஜூ – அமைச்சர் துரைமுருகன் இடையேயான பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.



தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செய்ய வேண்டியவை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, மதுரை மக்களுக்கு தூய்மையான குடிநீர் பல இடங்களில் கிடைப்பதில்லை என்றும், நல்ல குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “மதுரையில் சுத்தமான குடிநீர் கொடுப்போம். நீர் காலியாகமல் இருக்க அணையை தெர்மகோல் போட்டு மூடியுள்ளோம்” என்று கூற அரங்கத்தில் சிரிப்பலை எழுந்துள்ளது.

முன்னதாக செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்தபோது அணைகள் வறண்டு போவதை தடுக்க தெர்மகோல்களை அதில் மிதக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத மோதலை தூண்டுகிறாரா மதுரை ஆதீனம்? - மதுரை கமிஷனரிடம் புகார்!

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

அடுத்த கட்டுரையில்
Show comments