Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி உடல்நிலை குறித்து அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது?

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (08:22 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 4வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் திமுக நிர்வாகிகளும் மருத்துவமனை வட்டாரங்களும், அவருடைய உடல் சீராக இருப்பதை உறுதி செய்துள்ளன.
 
இருப்பினும் கருணாநிதிக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் அவருடைய உடல்நிலை குறித்து அடுத்த அறிக்கை வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று இன்னும் சிறிது நேரத்தில் காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளிவர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில் நல்ல செய்தி இருக்கும் என்றும், அந்த செய்தியை கேட்டுவிட்டு செல்ல முடிவு செய்திருப்பதாகவும் காவேரி மருத்துவமனை முன் கூடியிருக்கும் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாகவும், கடந்த சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தொடர்ந்து 4வது நாளாக அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தென்மேற்குப் பருவமழை தொடக்கம்: இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

அதிமுகவுடன் கூட்டணியா? கோவை பொதுக்கூட்டம்! - சீமான் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments