Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் மாதிரி ஏமாத்திறாதீங்க டாடி; உதயநிதி மைண்ட் வாய்ஸ்!!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (13:52 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக எம்.பி. கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். 
 
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. 
 
அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என பின்வாங்கிய நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள், களமிறங்கியுள்ளன. எதிர் எதிர் துருவங்கள் மோதுவதால் இந்த தேர்தல் சூடு பிடிக்கப்போவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
காங்கிரஸ் வேட்பாளர் நாங்குநேரியிலும், திமுக வேட்பாளர் விக்கிரவாண்டியில் போட்டிபோடும் என தேர்தல் தேதி அறிவித்த போதே ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக எம்.பி. கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். 
 
உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் இளைஞர் அணி செயளாலர் என முக்கிய பதவி கொடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஸ்டாலின் சீட் வழங்குவாறா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என ஸ்டாலின் நினைத்தால் அத்தொகுதியில் செல்வாக்கு மிக்கவராக உள்ள பொன்முடியை களமிறக்க கூடும். உதயநிதி ஸ்டாலினை வைத்து வழக்கம்போல் பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடும். 
இதற்கு முன்னரும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலின் போதும் உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டு கடைசியில் அது வீணாய் போனது. அதே போல் இம்முறையும் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் உதயநிதி இருக்க கூடும். 
 
இருப்பினும் ஸ்டாலின் இப்பொழுது உதயநிதியை தேர்தலில் களமிறக்கமாட்டார் என திமுக தரப்பில் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments