Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (10:04 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 900க்கு அதிகமான காளைகள் பங்கேற்கின்றன.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர்.
 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வந்தனர். அவனியாபுரத்தில் இன்றும் (14-ந் தேதி), பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 
 
அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  ஜல்லிக்கட்டை முன்னிட்டு 10 மருத்துவக் குழு, 12 கால்நடை மருத்துவக் குழு, மேலும் காயம் ஏற்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற 4 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments