Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதன் பகவானை எந்த நாளில் வணங்கவேண்டும் தெரியுமா...?

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (09:48 IST)
புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் புதன் பகவான்.


நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலமாகத் திகழ்வது திருவெண்காடு. சீர்காழிக்கு அருகில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.

புதன் பகவான் என்பவர் நமக்கு புத்தியில் தெளிவைக் கொடுக்கக்கூடியவர். புத்தியில் பலத்தைக் கொடுக்கக் கூடியவர். காரியத்தில் தெளிவைத் தந்தருளக்கூடியவர்.

புதன் பகவானை வணங்கித் தொழுதால், கல்வியில் மேன்மை கிடைக்கப் பெறலாம். தொழிலில் முன்னேற்றத்தைத் தந்தருளுவார் புதன் பகவான்.

வியாபாரத்தில் அபரிமிதமான ஏற்றத்தையும் மாற்றத்தையும் தருவார் புதன் பகவான். தொடர்ந்து புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி வந்தால், திருமணத் தடை நீங்கும். முக்கியமான, நோய்களையெல்லாம் தீர்த்தருளுவார் புதன் பகவான்.

புதன் பகவானுக்கு உகந்தது புதன் கிழமை. புதன் பகவானுக்கு உரிய ராசிகள் மிதுனமும் கன்னியும். புதன் பகவானுக்கு உரிய திசையாக வடகிழக்கு திசையைச் சொல்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். புதன் பகவானுக்கு உரிய அதிதேவதை மகாவிஷ்ணு. புதன் பகவானின் பிரத்யதி தேவதையாக ஸ்ரீமந் நாராயணனைச் சொல்லுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments