Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா...?

Webdunia
கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14  வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இது மட்டும் தான் காரணமா...?

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம். அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம்  என்கிறோம். 
 
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி  வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. (திங்கள்  என்றால் சந்திரன்). நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று (15 நாட்கள் அமாவாசையாகவும்) அடுத்த 15 நாட்கள்  பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.
 
அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.
 
சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது. அவ்வேளையில் சூரியனின் சக்தியும், சந்திரனின் சக்தியும்  பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித அதிர்வு ஏற்படுகிறது. அந்த அதிர்வு பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும். அதன் காரணமாக  அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த நல்ல காரியங்கள் தவிர்த்ததோடு, முடிவு எடுப்பதையும் தவிர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments