Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை போட்டி - நூலிழையில் எஸ்கேப் ஆன வங்கதேச அணி

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (10:37 IST)
ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிக்கிடையான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 
 
நேற்று அபுதாபியில் ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான லித்தன் தாஸ், நஜ்மல் உசைன் ஆகியோர் 41, 33 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக களமிறங்கியவர்களும் சொதப்பினர். இதனால் வங்கதேசம் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தவித்தது.
 
பின் சரிந்திருந்த வங்கதேச அணியின் ஸ்கோரை 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களுக்கு முன்னேற்றினர் இம்ருல் கெய்ஸ், மகமதுல்லா ஜோடி.
இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பொறுமையாக ஆடினர். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற பட்சத்தில், 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 246 ரன்களை எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி.
 
கடைசி ஓவரில் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருமே ஒரு த்ரில் எதிர்பார்ப்புடனே இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments