Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த்-2022: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (18:05 IST)
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் இந்திய வீரர், வீராங்கணைகள் பலரும் தங்கள் திறமையைக்காட்டி வரும் நிலையில், ஏற்கனவே இரண்டு தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ள இந்தியாவுக்கு இன்று டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் ஆகிய போட்டிகளில் 2 வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது.

பேட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவு அரை யிறுதியில் சிங்கப்பூர் அண்யை எஇந்திய அணி எதிர்கொண்டது இதில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியது.

இதில், பிவி சிந்து 21-11, 21-12 என்ற கணக்கிலும், சாத்விக் சாய்ராஜ் ரெட்டி சிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-12 என்ற கணக்கிலும் லட்சியா சென் 21-18, 21-15 என்ற கணக்கில் சிங்கப்பூர் வீரர் வீராங்கனையை தோற்கடித்தார்.

இன்று இரவு 10 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.

டேபிள் டென்னிஸில் ஆண்கள் அணிப்பிரிவில் இந்தியா அரையிறுதியில் நைஜீரியாவை 3- 0 என்ற கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments