Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் மைதானத்தில் வார்னரின் புஷ்பா மொமண்ட்… ரசிகர்கள் உற்சாகம்!

David Warner
Webdunia
புதன், 9 மார்ச் 2022 (09:17 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்திய பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்தவர். இந்தியா மீது தனிப்பிரியம் கொண்ட இவர் சென்னை வெள்ளத்தின்போது அதுகுறித்து நலம் விசாரித்து பதிவிட்டிருந்தார். டிக்டாக் தடை செய்யப்படாத காலத்தே இந்திய மொழி பாடல்களுக்கு டான்ஸ் ஆடி வீடியோ போட்டு வந்தார் வார்னர்.

அவரின் வீடியோக்கள் இணையத்தில் ஹிட் அடித்ததை அடுத்து தொடர்ந்து அதுபோல பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தைய ஹிட்டான புஷ்பா படத்தின் பாடலுக்கு அல்லு அர்ஜுன் போலவே நடனமாடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியது.

இந்நிலையில் இப்போது அவர் பாகிஸ்தானில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு மைதானத்தில் ஃபீல்ட் செய்த போது ரசிகர்கள் அவரை புஷ்பா போல செய்ய சொல்ல, அவரும் செய்து ரசிக்ர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் இப்போது கவனம் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

அடுத்த கட்டுரையில்