Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிசயம், ஆனால் உண்மை.. 125 ரன்களுக்கு குஜராத்தை சுருட்டி டெல்லி வெற்றி.!

Webdunia
புதன், 3 மே 2023 (07:27 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் 131 ரன்கள் மட்டுமே டெல்லி அணி இலக்காக கொடுத்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணி அந்த இலக்கை அடிக்க விடாமல் செய்த டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நேற்றைய போட்டிகள் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்ததை அடுத்து அந்த அணிக்கு முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது என்பதும் இரண்டாவது ஓவரில் கேப்டன் டேவிட் வார்னர் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அமன் கான் ஓரளவுக்கு அடித்து ஆடியதால் ஸ்கோர் 130 என ஆனது. 131 என்ற இலக்கை மிக எளிதாக குஜராத் அடித்து விடும் என்று வர்ணனையாளர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில் ஆச்சரியமாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் குஜராத் அணி ரன்கள் எடுக்க திணறியது

கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 12 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு பக்கம் ஹர்திக் பாண்ட்யா இன்னொரு பக்கம் ராகுல் திவேட்டியா இருந்தனர். ஆனால் அந்த 12 ரன்கள் எடுத்த முடியாமல் குஜராத் அணி தோல்வி அடைத்தது

இறுதியில் குஜராத் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்ததால் டெல்லி அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் டெலி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியால் புள்ளி பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் டெல்லி அணி 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments