Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிராஜ் மீது பந்தை தூக்கி எறிந்த ரசிகர்கள்… கடுப்பான கோலி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:36 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது ரசிகர்கள் பந்தை தூக்கி எறிந்ததால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் கடந்த போட்டியில் அவர் மீது ரசிகர்கள் பாட்டில் கார்க்குகளை வீசி அவமரியாதை செய்தனர். அதே போல நேற்று லீட்ஸ் மைதானத்திலும் தரக்குறைவான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ‘சிராஜ் மீது ரசிகர்கள் பந்தை தூக்கி எறிந்தனர். அது கோலிக்கு ஏமாற்றத்தை அளித்தது. ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments