5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் இந்தியா! ஜடேஜா - சாய் சுதர்சன் டிரா செய்வார்களா?

Mahendran
புதன், 26 நவம்பர் 2025 (10:38 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. 
 
தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, விக்கெட் இழப்பை தவிர்க்க முடியாமல் திணறி வருகிறது.
 
நேற்று தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியா, இன்று போட்டியை டிரா செய்யும் நோக்குடன் களமிறங்கியது. ஆனால், இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குல்தீப் யாதவ், துருவ் ஜுரல், மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.
 
தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் அபாரமாக பந்துவீசி இதுவரை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஜடேஜா, சாய் சுதர்சன் களத்தில் இருக்கும் நிலையில் இருவரும் நிதானமாக விளையாடி டிரா செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்..!

மண்வெட்டியை மண்வெட்டி என்று சொல்லுங்கள்… நிதிஷ்குமாரை சாடிய ஸ்ரீகாந்த்!

இந்திய வீரர்களைப் புலம்ப வைக்கவே அப்படி செய்தோம்… தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் பதில்!

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments