Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பவுலர்கள் அபாரம் – ஆஸி 89 ரன்னுக்கு 4 விக்கெட்

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (07:25 IST)
ஆஸ்திரேலியா மூன்றாவது நாளின் முதல் செஷனில் 4 விக்கெட்களை இழந்து 81 ரன்களை சேர்த்துள்ளது.

நேற்று முன் தினம் மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மயங்க் அகர்வார் (76),கோஹ்லி (82), புஜாரா (106), ரோஹித் (63*) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அதையடுத்து களமிறம்ங்கிய ஆஸி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து 3 ஆம் நாளை இன்று ஆஸ்திரேலிய அணியை இந்திய அணிப் பந்து வீச்சாளர்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் பிஞ்சை(8) இஷாந்த் சர்மா அவுட் ஆக்கி வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹாரிஸ்(22) பூம்ரா பந்தில் இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதற்கடுத்து சீரான இடைவெளியில் கவாஜா(21) ரன்னில் ஜடேஜா பந்திலும்,  உணவு இடைவேளைக்கு முன் கடைசிப் பந்தில் ஷான் மார்ஷ்(19) ரன்னில் பூம்ரா பந்திலும் அவுட் ஆகி வெளியேறினார். உணவு இடைவேளை ஆஸி 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களைக் குவித்துள்ளது. ஆஸி யின் டிராவிஸ் ஹெட் 18 ரன்களோடு களத்தில் இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments