Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்தான் உங்கள் கேப்டன்… நீங்கள் அல்ல – பாகிஸ்தான் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:17 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கானுக்கு சக வீரரான ஜாவீத் மியாண்டட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்கு உலகக்கோப்பை பெற்று தந்தவருமான இம்ரான் கான் அரசியலில் இறங்கி இப்போது அந்நாட்டின் பிரதமராக உள்ளார். இந்நிலையில் அவரின் சக வீரரான ஜாவீத் மியாண்டட் இம்ரான் கானுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

அதில் ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்தில் இப்போது அனைவரும் கிரிக்கெட்டின் ஏபிசிடி கூட தெரியாதவர்கள். பலர் வெளிநாட்டினர். அவர்கள் எல்லாம் ஊழல் செய்துவிட்டு சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டால் என்ன செய்வது. கிரிக்கெட் விளையாடும் நான் தான் உங்களுக்கு (இம்ரான் கானுக்கு) கேப்டன்.. நான் உங்களை வழிநடத்தினேன். இப்போது ஏதோ நீங்கள் கடவுள் போல் செயல்படுகிறீர்கள். கூடிய விரைவில் அரசியலுக்கு வந்து உங்களுக்கு சவால் அளிப்பேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments